கிணற்றில் மீட்கப்பட்ட இளம் தாயை கடத்திய மூவர் வவுணதீவு பகுதியில் சிக்கினர்”

கிணற்றில் மீட்கப்பட்ட இளம் தாயை கடத்திய மூவர் சிக்கினர்

கிணற்றில் மீட்கப்பட்ட இளம் தாயை கடத்திய மூவர்  வவுணதீவு பகுதியில் சிக்கினர்”

மட்டக்களப்பின் தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் உயிருடன் மீட்கப்பட்ட இளம் தாயை கடத்தி, தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த சம்பவத்தில், குறித்த கணவன்–மனைவி மற்றும் கணவனின் தம்பி உட்பட மூவரையும் வவுணதீவு பகுதியில் இன்று சனிக்கிழமை (21) இரவு 24 மணித்தியாலத்துக்குள்  பொலிஸார் கைது செய்துள்ளனர் 

பொலிஸாரின் விசாரணையில், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணையும் அவர்கள் அதே முறையில் தப்பியெடுக்க முயன்றதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக, கடந்த வியாழக்கிழமை வவுணதீவு நகரிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்ற 2 ½ வயது குழந்தையுடன் காணாமல் போன இளம் தாயையும் குழந்தையையும் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது. இளம் தாய் கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், அவரது குழந்தை வயல் பகுதியில் அழுத நிலையில் கைவிடப்பட்டிருந்தது. அதே நேரத்தில், கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலா ரத்தின தலைமையில், கொக்கட்டிச்சோலை, ஆயித்தியமலை, வெல்லாவெளி மற்றும் மட்டு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் விசேட குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் மாவட்ட புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை நடத்தியனர். சிசிடிவி கமராவில் பதிவாகிய வீடியோ மூலம், இளம் தாயை ஏற்றி சென்ற முச்சக்கரவண்டி மற்றும் அதில் இருந்த பெண்ணின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டன.

இதன்படி, இன்று (22)சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில் வவுணதீவு காஞ்சிரம்குடா பகுதியிலுள்ள வீட்டில் 26 வயதுடைய சோமசுந்தரம் சர்லியா கைது செய்யப்பட்டதாகவும். அவரது கணவர் 34 வயதுடைய வெற்றிவேல் சதீஸ்வரன் மற்றும் தம்பி 22 வயதுடைய வெற்றிவேல் தனோஜன் இருவரையும் வவுணதீவில் வைத்து கைது செய்யப்பட்டனர். மறைத்து வைக்கப்பட்ட கடத்தலுக்கான முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டது.

விசாரணை தொடர்பாக, சம்பவ தினம் குறித்த கணவன்–மனைவி மற்றும் தம்பி, வவுணதீவு பிரதேச செயலகம் முன் குழந்தையுடன் காத்திருந்த இளம் தாயை  முச்சக்கரவண்டியில் ஏற்றி சென்று, நகரை நோக்கி பயணம் செய்துள்ளனர். பயணத்தின் போது, மயக்க மருந்து கலந்த பழச்சாறு கொடுத்து, இளம் தாயை மயக்கப்படுத்தியதாகவும், 5 பவுண் தாலிக் கொடி மற்றும் ஒரு பவுண் தங்க சங்கிலியை கொள்ளையடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதே நேரத்தில், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணையும் யூசில் மயக்க மருந்து கொடுத்து, தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து கிணற்றில் விட்டதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறைந்த கட்டணத்தில் குழந்தையுடன் வலையிறவு பாலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இளம் தாயையும், தங்க ஆபரணங்களை மீட்டதும், சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மூவரும் தப்பியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களிடம், மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது என போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.

- கனகராசா சரவணன்-