மின் கட்டணத் திருத்தத்தில் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளவில்லை

மின் கட்டணத் திருத்தத்தில் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளவில்லை

மின் கட்டணத் திருத்தத்தில் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளவில்லை

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மத்திய கிழக்குப் பிரதேசத்தில் நிலவும் போர்ச் சூழ்நிலை மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றின் அடிப்படையில், இலங்கை மின்சார சபை தேவைப்பட்டால் மீண்டும் மின்கட்டணத் திருத்தம் தொடர்பான திட்டங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு ஏப்ரல் 01 முதல் மின்கட்டணங்களை உயர்த்த அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பல்வேறு பிரிவுகளின் கீழ் 4.3 சதவீதம் முதல் 25.3 சதவீதம் வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே. பீ. எல். சந்திரலால், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சுட்டிக்காட்டியதாவது:

இம்முறை மின்கட்டணத் திருத்தத்தில் பல விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படவில்லை. குறிப்பாக, மத்திய கிழக்கின் போர்ச் சூழ்நிலையின் தாக்கம், நிலக்கரி இறக்குமதி தொடர்பான நெருக்கடி நிலைமை, நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி தடைபடுதல் போன்றவை இந்தத் திருத்தத்தில் கருத்தில் கொள்ளப்படவில்லை.

இந்தக் காரணிகளால் இலங்கை மின்சார சபையின் அடக்கவிலை 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டால், அந்த சபையின் கோரிக்கையின் பேரில் மீண்டும் ஒரு கட்டணத் திருத்தத்தைப் பரிசீலிக்க வேண்டியிருக்கும் என்றும் பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.