பொடி லெஸ்ஸி இந்தியாவில் கைது, இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை

Podi Lesi arrested in India, extradition to Sri Lanka

பொடி லெஸ்ஸி இந்தியாவில் கைது, இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை
பொடி லெஸ்ஸி

கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக் காக தேடப்பட்டு வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த அருமஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வா, இன்று (பிப்ரவரி 26) இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பொடி லெஸ்ஸி' என்றே பரவலாக அறியப்படும் இவர், சட்டவிரோதமாக இந்தியாவில் தஞ்சம் அடைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் மும்பையில் வைத்து இந்திய  பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். இராஜதந்திர மட்டத்திலும், இன்டர்போல் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் பலனாக, இந்தியாவில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் நாடு கடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பிடத்தக்க வகையில், கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்கு களில் கைது செய்யப்பட்டிருந்த பொடி லெஸ்ஸி, 2024 டிசம்பர் 9ஆம் திகதி பிணை யில் விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்ததும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். அங்கு போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டார்.

இன்று மத்திய விமான நிலையத்தின் ஊடாக அவர் இலங்கைக்கு அழைத்து வரப்படு வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரிடம் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு, அவர் மீதுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தயாராக உள்ளனர்.