நாட்டின் பொருளாதார நிலை கருதி வாகனங்கள் கொள்முதல் நிறுத்தம் - ஜனாதிபதி தீர்மானம் !

நாட்டின் பொருளாதார நிலை கருதி வாகனங்கள் கொள்முதல் நிறுத்தம்.

நாட்டின் பொருளாதார நிலை கருதி வாகனங்கள் கொள்முதல் நிறுத்தம் - ஜனாதிபதி  தீர்மானம் !

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அன்னியச் செலாவணி கருத்தில் அரசாங்கத்திற்கு வாகனங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக இத்தகைய ஒரு முடிவை எடுக்க நேரிட்டதாக சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, மே மாதத்துக்கான எரிபொருள் இறக்குமதிக்கு மட்டும் அரசாங்கம் அமெரிக்க டொலர் 550 மில்லியனைச் செலவிட நேரிட்டுள்ளதாகவும், இதனால் எரிபொருள் பாவனையை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எரிபொருளுக்கான இந்தப் பெருஞ்செலவைக் கருத்திற் கொண்டு, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த தேவையற்ற செலவுகளைக் குறைப்பது இன்றியமையாதது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் காலப்பகுதியில் அரசாங்கத்திற்கான வாகனங்கள் வாங்குவதைத் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.