சுங்க வரியில்லா வாகன விற்பனை வருமானம் ஜே.வி.பியின் கட்சி நிதிக்கு
Proceeds from sale of duty-free vehicles
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றின் போது,மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) நிதி தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, முன்னாள் அரசாங்கத்தால் சுங்க வரியில்லாமல் வழங்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைத்த பணம் அக்கட்சியின் நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஜக்கிய மக்கள் கட்சி பாரளுமன்ற உறுப்பினா். சமிந்த விஜேசிறி, பெப்ரவரி 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய இடைக்கேள்வி ஒன்றின் போதே இந்தத் தகவலை வெளியிட்டார். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்சி தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பித்துள்ள 2015 டிசம்பர் 31 உடன் முடிவடையும் நிதியறிக்கையை மேற்கோள்காட்டி அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
அந்த நிதியறிக்கையின்படி, அரசாங்கத்தால் சுங்கவரியில்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைத்த நன்கொடையாக ரூபாய் 10.9 மில்லியன் (ரூ. 10,900,000) பணம் கட்சி நிதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதால், வரி விலக்கு வாகன இறக்குமதி அனுமதிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதை ரத்து செய்வதாக மக்கள் விடுதலை மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முன்னர் உறுதியளித்திருந்தது. அது தொடர்பில் இதுவரை அறிவித்திருப்பது, வரி விலக்கு வாகன அனுமதிகளை வழங்குவதன் மூலம் ஏற்படும் அரச நிதி தவறான பயன்பாடு காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்காக அரசாங்கத்தால் வாகனம் ஒன்று வழங்கப்படும் என்பதாகும்.
அவ்வாறாயினும், அதற்கு முன்னர் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் வரி விலக்குடன் பெற்றுக் கொண்ட வாகனங்களை விற்று கட்சியின் நிதிக்குப் பணம் பெற்றுக் கொண்டுள்ளமை தேர்தல் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட அந்த நிதி அறிக்கையின்படி தெரியவருகிறது.
அந்த நிதி அறிக்கையின் தகவல்களின்படி, 2015 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடையும் ஆண்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளமாக ரூபா 4,028,397ம், மாகாண சபை உறுப்பினர் சம்பளமாக ரூபா 12,820,086ம், உள்ளூராட்சி உறுப்பினர் கொடுப்பனவாக ரூபா 2,648,550ம், உறுப்பினர் ஓய்வூதியமாக ரூபா 3,290,128ம், நாடாளுமன்ற உறுப்பினர் பணியாளர் கொடுப்பனவாக ரூபா 1,617,234ம், மாகாண சபை உறுப்பினர் பணியாளர் கொடுப்பனவாக ரூபா 13,752,873ம் இதற்கு மேலதிகமாக அந்தக் கட்சிக்குக் கிடைத்துள்ளன.
இதற்கு மேலதிகமாக, முழு உறுப்பினர் பணமாக ரூபா 226,500ம், கிளை சங்க உறுப்பினர் பணமாக ரூபா 313,000ம், அன்பர்களின் நன்கொடைகளாக ரூபா 9,156,330ம், தேர்தல் உதவியாக ரூபா 23,797,533ம், வெளியீடுகளுக்கான வரவுகளாக ரூபா 4,645,690 தொகையும் அந்தக் கட்சிக்கு அந்த ஆண்டில் கிடைத்துள்ளன.
அதன்படி, அந்த வரவுகளின் மொத்தத் தொகை ரூபா 87,196,322 ஆகும்.
அந்த நிதி அறிக்கையில் செலுத்துதல்களாக அலுவலக பராமரிப்பு, வாகன பராமரிப்பு, பிரச்சார நடவடிக்கைகள், 'நியமுவ' வெளியீடு, தேர்தல் நடவடிக்கைகள், சட்ட நடவடிக்கைகள், வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகள், வங்கிக் கட்டணங்கள், தணிக்கையாளர் கட்டணங்கள், முதலீட்டுக் கணக்கிற்கு மாற்றல், புதிய கட்டுமானங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள், வாகன வரிகள், மூன்று கட்ட மின் கம்பிகள் இழுத்தல், நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் பிற செலுத்துதல்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த ஆண்டின் கட்சியின் மொத்த செலவுகள் ரூ. 79,230,583 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025.01.01 ஆம் திகதிக்கு ரொக்க இருப்பாக ரூபா 7,965,739 இருந்துள்ளது. 2025.12.31 ஆம் திகதிக்கு இருந்த ரூபா 14,115,127 ரொக்க இருப்புடன் சேர்ந்து அது ரூபா 22,080,866 ஆக மாறியுள்ளது.
ஜே.வி.பி.யின் நிதி அறிக்கைகள் தொடர்பான அந்தத் தகவல்களை சமிந்த விஜேசிறி உறுப்பினர் தெரிவித்ததன் பின்னர், அதற்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஜே.வி.பி. அவ்வாறு தனது நிதித் தகவல்களை முன்வைத்தமை குறித்துப் பெருமைப்படுவதாகவும், அவ்வாறே ஏனைய அரசியல் கட்சிகளும் தமது நிதித் தகவல்களை முன்வைக்குமாறு முன்மொழிவதாகவும் கூறினார்.
Editor