சஷி வீரவன்சாவின் சட்டவிரோத கடவுசிட்டு வழக்கு மே 25 க்கு ஒத்திவைப்பு !
சஷி வீரவன்சாவின் சட்டவிரோத கடவுசிட்டு வழக்கு!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சாவின் மனைவி சஷி வீரவன்சாவுக்கு எதிரான சட்டவிரோத இராஜதந்திர பாஸ்போர்ட் வழக்கை இம்மாதம் (மே 2026) 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று (11) விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
நீதிமன்றில் பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி புத்திக சந்திரசேகர, இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை முன்வைப்பதற்கு முன்னர், ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட கணினி மூலம் உருவாக்கப்பட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட கணினி முறைமையைச் சோதிப்பதற்கான வாய்ப்பு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
சாட்சியச் சட்டத்தின் விதிகளுக்கிணங்க இதுவரை அத்தகைய வாய்ப்பு கிடைக்காததால் வழக்கினைத் தொடர்வதற்குத் தடையாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் ஆவணங்களை உருவாக்கிய பொருத்தமான கணினி முறைமையைப் பிரதிவாதி ஆய்வு செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, அடுத்த விசாரணைத் தேதியில் நீதிமன்றுக்குத் தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு நீதவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (சிஐடி) உத்தரவிட்டார்.
அதன்படி, வழக்கு மேலதிக விசாரணைக்காக மே 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.