பல்லேகம ஹேமரத்தன தேரரை மே 12ஆம் திகதி வரை ரிமாண்ட் !
பல்லேகம ஹேமரத்தன தேரரை ரிமாண்ட் !
15 வயதுச் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பல்லேகம ஹேமரத்தன தேரரை, எதிர்வரும் 12 ஆம் தேதி விளக்கமறியல் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சந்தேக நபரை மே12 ஆம் தேதி அனுராதபுர சிறைச்சாலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரான பல்லேகம ஹேமரத்தன தேரரை மே 8 ஆம் தேதி இரவு கொழும்பில் உள்ள நவலோக மருத்துவமனையில் வைத்து கைது செய்யப்பட்டார். அந்த மருத்துவமனையிலேயே நீதவான் அவரை விசாரணை செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், மருத்துவ ஆலோசனையின் பேரில் சந்தேக நபரைக் கொழும்பு தேசிய மருத்துவமனை அல்லது சிறை மருத்துவ மனைக்குச் சிகிச்சைக்காக அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
விளக்கமறியல் வைக்க உத்தரவிடப்பட்ட பின்னர், சந்தேக நபரை நவலோக மருத்துவமனையில் வைத்திருக்க முடியாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.