கீரி சம்பா, சம்பா அரிசி இறக்குமதி செய்ய தீர்மானம்
அரிசி இறக்குமதி செய்ய தீர்மானம்
நாட்டில் நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கீரி சம்பா மற்றும் சம்பா அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவசிய சேவைகள் ஆணையாளர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி இன்று (26) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய சரக்குகளில் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டில் குறைவாக உள்ள சில உணவுப் பொருட்கள் மற்றும் தானியங்களை இறக்குமதி செய்ய உணவு பாதுகாப்புக் குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பா, கீரி சம்பா போன்ற அரிசிகள் அதிக விலையில் (கருப்பு சந்தை விலை) விற்பனை செய்யப்படுவது தீவிர பிரச்சினையாக இருப்பதாகவும், இந்த விடயம் உணவு பாதுகாப்புக் குழுவில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், எதிர்காலத்தில் அரிசி இறக்குமதி செய்யப்படும் வாய்ப்பும் உள்ளதாக அவசிய சேவைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
Editor