பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார்

தேசியதேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடிமாலை 4.50 மணியளவில் விமானம் மூலம் திருச்சி வந்தடைகிறார்

அங்கிருந்து சாலை மார்க்கமாக சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஞ்சப்பூர் நோக்கிப் புறப்பட்டார். அவர் செல்லும் வழியெங்கும் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பிரதமரை வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகள்வளைவுகள் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தன. பிரதமரின் பாதுகாப்பு கருதிஅவர் செல்லும் வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இன்று மாலை  திருச்சி பஞ்சப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிபாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்தமாகா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதற்கு முன்னதாகபிரதமர் மோடி இன்று பிற்பகல் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். கேரளாவில் இருந்து நேரலை மூலம் அவர் பங்கேற்று இத்திட்டங்களைத் துவக்கி வைத்தார்.

நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ரூ.3,680 கோடி முதலீட்டில் அமைக்கவுள்ள நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பு (சிஎன்ஜி / பிபிஎல்) திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

பிரதான் மந்திரி கிராம சாலை யோஜனா (பிஎம்ஜிஎஸ்ஒய்) திட்டத்தின் கீழ்தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 370 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள 89 கிராமப்புற சாலைகளைத் தொடங்கி வைத்தார்.

கங்கைகொண்ட சோழபுரம் அருகே அமையவுள்ள பசுமை வழிப் புறவழிச்சாலைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

மேலும்இரண்டு அம்ரித் பாரத் விரைவு ரயில்கள் உட்பட புதிய ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடியின் இந்த வருகைவரும் சட்டமன்றத் தேர்தல் பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பஞ்சப்பூர் பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றும் உரை மீது மாநில அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.